“ஏண்டா 60 ரூபாய்க்கா இப்படி பண்ணுவே ?”காட்டுக்குள் கதறிய டீனேஜ் பையன்

 

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹாமிர்பூர் மாவட்டத்தில் சுமேர்பூர் நகரில் உள்ள கான்ஷி ராம் காலனி அருகே 13 வயதான சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த சிறுவனுக்கு சுப்பி என்று ஒரு டீனேஜ் நண்பர் இருந்தார் .அந்த சுப்பி இடம் அந்த சிறுவன் சில பொருட்கள் வாங்குவதற்காக 60 ரூபாய் கடன் வாங்கியிருந்தார் .

அதன் பிறகு அந்த கடனை அந்த சிறுவனால் கொடுக்க முடியவில்லை .இதனால் அந்த சுப்பி அந்த சிறுவனிடம் கடனை கேட்டு தொல்லை தந்தார் .அதனால் கோவப்பட்ட அந்த 13 வயதான சிறுவன் அந்த தனது நண்பர் சுப்பியை ஒரு காட்டுக்குள் அழைத்து சென்றார் .அப்போது அந்த நண்பர் சுப்பியை அந்த சிறுவன் தாக்கினார் .அதன் பிறகு இருவருக்கும் நடந்த சண்டையில் அந்த சிறுவன் தனது நண்பர் சுப்பியை அடித்து கொன்று விட்டார் .பின்னர் அவரின் சடலத்தை அங்கேயே ஒரு புதரில் வீசிவிட்டு வந்து விட்டார் .கடந்த புதன் கிழமை போலீசுக்கு இந்த கொலை பற்றி தெரிந்தது .

அதனால் போலீசார் காட்டு விலங்குகளால் சிதைக்கப்பட்டு 11 பாகங்களாக கிடந்த இறந்த சிறுவனின் உடலை மீட்டனர் . பின்னர் இறந்து கிடந்த சுப்பியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .அதன் பிறகு அவரை கொன்ற அந்த 13 வயதான சிறுவனை பிடித்து விசாரித்து அவரை சிறை வைத்தனர் .

Contact Us