குழவிக்கல்லை தலையில் போட்டு… மூதாட்டியை துடிதுடிக்க கொலை செய்த பெயிண்டர்!

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வசித்து வந்த மூதாட்டி மாராயி (92). இந்த மூதாட்டி வெகுநேரமாகியும் இன்று காலை கதவை திறக்காததால் அவரது பேரன் கணேசனுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த காளிதாஸ் தகவல் கொடுத்துள்ளார். கணேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே திறந்து பார்க்கையில் மூதாட்டி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார், தகவல் கொடுத்த காளிதாசனிம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குழவிக்கல்லை தலையில் போட்டு… மூதாட்டியை துடிதுடிக்க கொலை செய்த பெயிண்டர்!
அப்போது, பாட்டி வீட்டில் தான் வாடகைக்கு இருப்பதாகவும் அவர் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருட முயன்ற போது பாட்டி எழுந்து கொண்டதால் குழவிக் கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கொலை செய்து விட்டு தனது வீட்டிற்கு வந்து சென்றுவிட்டதாகவும் அவரது பேரனுக்கு தானே தகவல் கொடுத்ததாகவும் காளிதாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து காளிதாஸை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us