தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்…. அமெரிக்காவிற்கு எழுந்த கோரிக்கை…. வெளியான முக்கிய தகவல்….!!

 

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசாரிலுள்ள விமான நிலையம் சில நாட்களுக்கு முன்பாகத்தான் சர்வதேச விமானங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மசார் விமான நிலையத்தில் பலநூறு மக்களை கொண்ட 4 விமானங்களை தலிபான்கள் அந்நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக அமெரிக்க நாட்டிற்கு உதவி கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக தலிபான்களின் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தலிபான்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்களிலுள்ள பலருக்கு விசா இல்லை என்பதாலேயே அவர்களால் தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அனைத்து நிலைமையும் சரிசெய்யப்பட்டு அந்த விமானங்கள் அனைத்தும் தங்கள் நாட்டைவிட்டு வெற்றிகரமாக வெளியேறி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர் ஒருவர் இதுதொடர்பாக முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்கனில் தலிபான்கள் வெளிநாட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய விமானங்களில் அமெரிக்க பொதுமக்களும் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் விமானத்தில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை பிணைக் கைதிகளாகவும், அடிமைகளாகவும் வைத்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Contact Us