ஆசைக்கு மறுத்த காதலன் -ஆசிடை எடுத்த காதலி -அடுத்து காதலனுக்கு ஏற்பட்ட சோகம்

 

கல்யாண ஆசைக்கு இணங்க மறுத்த காதலன் மீது ஆசிடை வீசிய காதலியை போலீசார் கைது செய்தனர் அரியானாவின் சண்டிகர் அருகேயுள்ள ஹிசாரில் வசிக்கும் 23 வயதான சுபாம் என்ற வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய உறவினரின் மகளான மனீஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் அந்த மனீஷா தனது காதலன் சுபாமிடம் தன்னை விரைவில் கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார் .ஆனால் அதை கேட்ட சுபாம் தான தன்னுடைய குடும்பத்தாரிடம் இது விஷயமாக பேசி,அவர்களின் முழு சம்மதமும் பெற்றபிறகு தான் கல்யாணம் செய்து கொள்வதாக கூறினார் .

மேலும் சுபாமிடம் அவரின் சகோதரியின் சில ஆட்சேபகரமான் படங்கள் இருப்பதாக அந்த மனீஷா அவரை சந்தேகப்பட்டு அதை டெலிட் செய்யுமாறு கேட்டார் . இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .இந்த தகராறில் அந்த மனீஷா கோபமுற்று அந்த காதலன் சுபாம் மீது ஆசிடை வீசினார் .இதனால் கடுமையான் தீக்காயத்துக்கு ஆளான அந்த சுபாம் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .பின்னர் அவர் அந்த பெண் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த மனீஷா மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Contact Us