கடைசி நகரமும் வீழ்ந்தது: துருக்கிக்கு தப்பி ஓடிய நகர காவல் அதிகாரிகள்….

ஆப்கானிஸ்தானில் சில நகரங்கள் மட்டுமே, தலிபான்களை எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறது. அன் நகரங்களில் உள்ள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமது நகரங்களை தக்க வைத்து வரும் நிலையில். பல நகரங்கள் தலிபான்கள் கைகளில் வீழ்ந்து வருகிறது. இந்த வரிசையில் கடைசியாக பஞ்ஹீர் என்னும் நகரம், இறுதிவரை தலிபான்களை எதிர்த்துப் போராடி வந்து. ஆனால் அந்த நகரத்தின் சிங்கம் என்று அனைவராலும் வர்ணிக்கப்பட்ட, தலைவர் திடீரென துருக்கி நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் சென்ற கையோடு அன் நகரமும் தலிபான்கள் கைகளில் வீழ்ந்து விட்டது. இதனால்…

கடைசி நகரமும் தலிபான்கள் கைகளில் வீழ்ந்தது. இதனூடாக 100 சத விகிதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தமது கட்டுப்பாடினுள் கொண்டு வந்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. சற்று முன்னரே இந்த தகவலை தலிபான்கள் வெளியிட்டு கொண்டாடியும் உள்ளார்கள். அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்களை பாவித்து. அவர்கள் பல நகரங்களை கட்டுப் பாட்டினுள் கொண்டுவந்துள்ளார்கள் என்பது அதிர்ச்சியான தகவல் தான்.

Contact Us