ஆப்கான் தேவதை லண்டன் வர பீரீத்தி பட்டேல் அனுமதி வழங்கியுள்ளார்- பிரிட்டன் பிரிட்டன் தான்….!

கடந்த சில தினங்களுக்கு முன்னர், காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். இதில் விமானத்தில் ஏறி அங்கிருந்து தப்ப என காத்திருந்த அப்பா, அவரது கையில் இருந்த சிறிமியும் குண்டு தாக்குதலுக்கு இரையாகி. அப்பா இறந்து போக சிறுமி படுகாயமடைந்த நிலையில் இருந்தார். அவரை அமெரிக்க துருப்புகள் உடனடியாக ஏற்றி, பாக்கிஸ்தான் கொண்டு சென்று அங்கே சிகிச்சை அளித்தார்கள். இந்த சிறுமியின் புகைப்படங்கள் வெளியாகி உலகை உலுப்பியது. இவருக்கு காபூலின் தேவதை என்று, ஊடகங்கள் பட்டம் சூட்டியது. தற்போது இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்… அவரை பிரித்தானியா …

கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் இந்த சிறுமிக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கு பிரித்தானிய விசா வழங்குவதாக நேரடியாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமி பாக்கிஸ்தானில் இருந்து நேரடியாக பிரித்தானியா வந்து மேலதிக சிகிச்சை பெற்று, பிரித்தானியாவில் குடியேறவுள்ளார், என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us