லண்டனில் இலங்கை எம்பாசி டாலர்களை கடத்துகிறது- தமிழர்கள் பெரும் உதவி என்பது கசிந்தது … !

பிரித்தானிய ஒரு பவுண்டின் இலங்கை பெறுமதி 323 ரூபாவை தொட்டுள்ளது என்பது, பல தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடையம். ஆனால் இந்த விலையை இலங்கை அரசு தான் ஏற்படுத்தி உள்ளது என்பது பலர் அறியாத விடையம். உண்மையில் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம் 277 ரூபா தான். அப்படி என்றால், 46 ரூபாவை எப்படி எக்ஸ்ரா(Extra) வாக தருகிறார் இந்த உண்டியல் காரர்கள் ? இது எப்படி சாத்தியம் என்று யாராவது நினைத்தீர்களா ? இங்கே தான் சிங்கள புத்தி ஜீவிகள் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் பல வெளி நாடுகளில் செயல்பட்டு, இலங்கை ரூபாயின் விலையை கூட்டியுள்ளார்கள். இதனால் பல தமிழர்கள் நல்ல ரேட் போகிறது என்று, வழமையாக அனுப்பும் காசை விட பன் மடங்கு கூடிய காசை இலங்கைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இந்த பவுண்டுகளை, மற்றும் அமெரிக்க,  கனேடிய டாலர்கள், சிங்கள அதிகாரிகள் அப்படியே வாங்கி இலங்கை தூதுவராலயத்திடம் கொடுக்கிறார்கள்.

இதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலங்கை தூதுவராலயத்தில், பல லட்சம் வெளிநாட்டு காசுகள் சேகரிக்கப்பட்டு. அவர்கள் வங்கி(Bank) ஊடாக இலங்கைக்கு அனுப்பப் படுகிறது. இலங்கை அரசின் வெளிநாட்டு தூதுவராலய வங்கிக் கணக்கை, பொலிசார் அல்லது அன் நாட்டு அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது. தூதுவராலயத்தில் வேலை பார்க்கும் நபர்களுக்கு எப்படி இமியூனிட்டி என்று சொல்லப்படும் ராஜாங்க பாதுகாப்பு உள்ளதோ. அது போல அந்த வங்கிக் கணக்கிற்கும் இமியூனிட்டி உள்ளது. இதனால் அதனை கவனிக்க எந்த ஒரு நாட்டிற்கும் உரிமை இல்லை. இதனால் இந்த வங்கி இமியூனிட்டியை பாவித்து தாம் சேர்த்த பணத்தை அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் போது. அது அன்னியச் செலாவணியாக இலங்கை மத்திய வங்கிக்கு போய் சேரும்.

எனவே தமிழர்களே, நல்ல ரேட் போகிறது என்று நினைத்து அதி கூடிய பணத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டாம். இதனால் இலங்கை அரசு கொள்ளை லாபம் அடைகிறது. தமிழர்கள் இலங்கைக்கு காசு அனுப்புவதை நிறுத்தினால் போதும். இன்னும் 3 மாதங்களில் இலங்கை அரசு,  சோமாலிய அசரைப் போல, செயல் இழந்து திவால் ஆகி விடும். சிங்கள புத்தி ஜீவிகள் போட்டுள்ள இந்த புது திட்டத்தை, தமிழர்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள். விழித்துக் கொள்வோம்.

தற்போது இலங்கைக்கு ஒரு நாளைக்கு 100 சுற்றுலாப் பயணிகள் கூட செல்வது இல்லை. இதனால் இலங்கையின் அன்னியச் செலாவணி குறைந்து சென்று. அறவே அமெரிக்க டாலர்கள் அற்றுப் போனது. இதனை ஈடு செய்யவே தமிழர்கள் பணத்தை கொள்ளையடிக்க, தனது நாட்டின் காசின் ரேட்டை கள்ளச் சந்தையில் கூட்டி விட்டுள்ளது இலங்கை அரசு. இதனை நம்பி நாம் ஏமார வேண்டாம்.

Contact Us