செக்ஸ் ஸ்டிரைக் போராட்டத்தில் பெண்கள்…. அழைப்பு விடுத்த பிரபல பாடகி…. வெளியான தகவல்கள்….!!

 

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் பெண்கள் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு பிரபல நடிகை மற்றும் பாடகியுமான பெட்டே மிட்லர் பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது கருக்கலைப்பு செய்வது என்பது இந்த சமூகத்தில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஒரு சில மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்பே பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையடுத்து கருக்கலைப்பு சட்டத்திற்கு விரோதாமான செயல் என்ற சட்டத்தை அமெரிக்க டெக்சாஸ் மாகாணமும் அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அங்கு தற்போது புதிய கருக்கலைப்பு சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்றால் கருவில் சிசுவின் இதயத்துடிப்பு உணரப்பட்ட காலத்திற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய கூடாது. இருப்பினும் செய்வதாக இருந்தால் கருவில் சிசுவின் இதயத்துடிப்பை உணருவதற்கு முன்பே செய்து விடவேண்டும். அதன்பின் கருவில் சிசுவின் இதயத்துடிப்பை உணர 6 வார காலம் ஆகலாம். இந்த காலத்தில் பெண்கள் கருவுற்று இருக்கிறார்களா என்பதே அவர்களுக்கு தெரியாது. அப்படி இருக்கும் வேளையில் இந்த சட்டம் நடைமுறைக்கு சாத்தியமாகாது. இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பெண்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பிரச்சனை நிறைந்த இந்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதனை விசாரித்த நீதிமன்றம் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கி கொண்டது. இதன் காரணமாகவே பெண்கள் பல பகுதிகளில் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த நூதன போராட்டத்திற்கு பிரபல பாடகி மற்றும் நடிகையுமான  பெட்டே மிட்லர் பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ட்விட்டர் வாயிலாக பெட்டே மிட்லர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது “கருக்கலைப்பு திட்டத்தை அரசு திருத்தும் வரை பெண்கள் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இது பெண்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உடலமைப்பு சம்பந்தப்பட்டது. இதில் பெண்களுக்கு நீதி வழங்கும் வரை நாங்கள் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்கில்’ ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.

Contact Us