“எத்தனை பேரு ,எத்தனை நாளுன்னே தெரியலியே” ரயில் நிலையத்தில் டீனேஜ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் வசிக்கும் 13 வயதான பெண்ணொருவர் தனியாக கடந்த வாரம் அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு வந்தார் .அவர் தன்னுடைய தோழியை கூட்டிப்போவதற்காக அந்த ரயில் நிலையம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு அங்கு வந்தார் .அப்போது அவரின் தோழி அன்று இரவு ரயிலில் வராததால் அவர் தனியாக இரவு நேரத்தில் திரும்பி சென்றார் .

அப்போது அவரின் அருகே வந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் அவரிடம் பேசசு கொடுத்து வீட்டில் விடுவதாக கூறி கூட்டி சென்றார் .பின்னர் அந்த பெண்ணை ஒரு இடத்தில் கடத்தி சென்று தங்க வைத்தார் . பிறகு அவரும் அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் பலரும் அங்கு வந்து அவரை பலாத்காரம் செய்தனர் .பின்னர் மேலும் பல இடங்களுக்கு கடத்தி சென்று இரண்டு நாட்களுக்கு மேல் ஐந்து ஆட்டோ ட்ரைவர் மற்றும் இரண்டு ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் ஏழு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டார் .

அதன் பிறகு அந்த பெண்ணை காணாததால் , அவரின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள் .பொலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு தேடிய போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது .அப்போது அந்த ஏழு பேரில் இருவரை கைது செய்தனர் .மற்றவர்களை தேடி வருகின்றனர் .பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Contact Us