தந்த காசை எல்லாம் பிடுங்க ஆரம்பித்துள்ள பொறிஸ்: தனக்கு தானே குழி வெட்டுவதாக கான்சர்வேட்டிவ் கட்சி சாடல் !

பிரிட்டனில் கடந்த கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு பல சலுகைகளை வாரி வாரி வழங்குவது போல காட்டிக் கொண்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சன். தற்போது அவை அனைத்தையும் பிடுங்க ஆரம்பித்து விட்டார். நஷனல் இன்சூரன்ஸ் TAX 1.25% சத விகிதத்தால் அதிகரிக்க உள்ளது. எனவே 30 ஆயிரம் வருடம் உழைக்கும் நபர், £255 பவுண்டுகளை மேலதிகமாக கட்டவேண்டி வரும். அதாவது National Insurance டாக்சாக அது வெட்டப்படும். இதனூடாக 10 பில்லியன்(மில்லியன் அல்ல பில்லியன்) பவுண்டுகளை மேலதிகமாக சம்பாதிக்க பொறிஸ் ஜோன்சன் திட்டம் தீட்டி உள்ளார். ஆனால் இது,  தனக்கு தானே குழி வெட்டும் நடவடிக்கை என்று, அவரது கட்சியின்,  மூத்தஉறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும். அதனை அவர் மதிக்கவில்லை.. இன் நிலையில்…

இந்த கொரோனா கால கட்டத்தில் மக்கள் வரிப்பணத்தை மேலும் உயர்த்த பொறிஸ் திட்டம் தீட்டியுள்ள விடையம், பல மீடியாக்களில் வெளியாகி அவரது செல்வாக்கை வெகுவாக குறைக்க ஆரம்பித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Contact Us