கிச்சனுக்குள் புதைக்கப்பட்ட கள்ள காதலி-அதன் மேல் வாழ்ந்த காதலன்.

 

கள்ள காதலியை கொலை செய்து கிச்சனில் புதைத்த காதலனை போலீஸ் கைது செய்தது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பணிக்கன்குடியில் 49 வயதான பினோய் என்ற நபர் வசித்துவந்தார் .இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதான சிந்து என்ற பெண்ணுக்கும் காதல் உண்டாணது .அந்த சிந்துவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு மகன் இருக்கிறார் .அவர் அவரின் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்த நிலையில் அவருக்கு பினோயுடன் கள்ள காதல் உண்டானது .இதனால் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினர் .

இந்நிலையில் அந்த காதலனுக்கு அந்த காதலி போர் அடிக்க ஆரமபித்ததால் ,அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது .எதற்கெடுத்தாலும் அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது .மேலும் அந்த பினோய் எந்நேரமும் அவரை குறை சொல்லிக்கொண்டே இருந்தார் .அதனால் அந்த பெண் சிந்துவுக்கு அவரின் முதல் கணவர் மீது அனுதாபம் பிறந்து ,அவரோடே சென்று விடலாம் என்று முடிவெடுத்தார் .அதனால் அந்த பினோய்க்கு அவரின் காதலி மீது கோபம் வந்து அவரை கொலை செய்ய முடிவெடுத்தார் .

அதன் படி கடந்த வாரம் அந்த சிந்துவை கொன்று அவரின் பிணத்தை வீட்டின் கிச்செனில் புதைத்துவிட்டார் .பின்னர் அந்த கிச்செனிலேயே சில நாள் வசித்தார் .இந்நிலையில் அந்த சிந்துவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த பினோய்யை பிடித்து விசாரத்தனர் அப்போது அவர் சிந்துவை கொன்று கிச்சனில் புதைத்ததை கண்டுபிடித்தனர் .பிறகு கிச்செனிலிருந்து அவரின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்

Contact Us