பல்டி அடித்த அமெரிக்கா… தலிபான் தலைவர்களோடு சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது இனி உதவிகளாம் !

ஆப்கானிஸ்தான் தலைவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. கடுமையான வறட்சி மற்றும் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவற்றை ஆப்கானிஸ்தான் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முல்லா அப்துல் கனி பரதர், அமெரிக்காவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை பொதுச்செயலாளர் மார்டின் கிரிஃபித்ஸ்-ஐ காபூலில் சந்தித்து பேசினார். அப்பொழுது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அந்நாட்டிற்கு ஒத்துழைப்பு அளிக்கவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதனை தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹெல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

Contact Us