விமான நிலையத்தில் சிக்கிய பெண் சாமியார்: பையை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 

பெண் சாமியார் கொண்டு வந்த பையில் மனித மண்டை ஓடு இருந்ததை கண்டு விமான அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மத்திய பிரதேச மாநில் உஜ்ஜைனி மாவட்டத்தை சேர்ந்த பெண் சாமியார் சாத்வி யோக்மாதா. இவர் கடந்த திங்கள் கிழமை டெல்லி செல்லும் விமானத்தில் பயணக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக விமான நிலையம் வந்த போது அவர் கொண்டு வந்த பைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது யோக்மாதா கொண்டுவந்த ஒரு பையில் மனித மண்டை ஓடு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த பொலிஸார், மனித மண்டை ஓடு பையில் இருந்தது குறித்து யோக்மாதாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, இது தனது குருநாதரின் மண்டை ஓடு எனவும், இதை கரைக்க ஹரித்துவாருக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் யோக்மாதா கூறினார். இது குறித்து யோக்மாதாவிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us