ஆப்கானிஸ்தானில் இடைக்கால ஆட்சி.. தலீபான்கள் வெளியிட்ட தகவல்..!!

 

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், புதிய ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காபூலில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானில் அமையப்போகும் தலிபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவராக முல்லா முகமது ஹசன் அகண்ட் இருப்பார். மேலும் தலிபான் அமைப்பின் தலைவரான, முல்லா அப்துல் கனி பரதர், துணைத் தலைவர்களில் ஒருவர் என்று தெரிவித்தார்.

மேலும், ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சா வெளியுறவுத்துறை துணை மந்திரி மற்றும் உள்துறை மந்திரி, சிராஜுதீன் ஹக்கானி என்று கூறினார். அடுத்ததாக, முல்லா யாக்கூப், பாதுகாப்பு மந்திரியாக இருப்பார். இந்த மந்திரிசபையானது, ஆட்சியை நடத்தக்கூடிய இடைக்கால அமைப்பு தான். நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானது. தற்போது புதிய ஆட்சி அமைக்கப்படுகிறது. எனவே, மக்களின் குறைகளை அரசிடம் தான் கூற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us