சிவகார்த்திகேயன் மற்றும் சதீஷுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்… வெளியான பழைய புகைப்படம்…!!!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனது வெற்றியை பதித்தவர் மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன்.

அதன் பிறகு மீண்டும் தனுஷின் தயாரிப்பில் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது அவர்களது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Contact Us