மகளை தீயிட்டு கொளுத்திய தந்தை…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 

துருக்கி நாட்டில் அஹ்மத் முகமது த்வாலா என்ற தந்தை ஒருவர் தனது 13 வயதுடைய மகளான அமரா த்வாலா என்பவரை குளியல் அறையில் உயிருடன் கொளுத்தி விட்டு மாயமாகியுள்ளார். அந்த சம்பவத்தின் போது அமரா த்வாலாவின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வீட்டில் பாட்டு சத்தத்தை அதிக அளவில் ஒலிக்க வைத்துள்ளார். அதன்பின் தனது இன்னொரு 12 வயதுடைய மகளுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அமரா த்வாலாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அப்போது ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே அமரா த்வாலா தனது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் என் தந்தையே இந்த சம்பவத்திற்கு முழுமையாக காரணம் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் அமரா த்வாலா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் அகால மரணம் அடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் துரிதாமாக செயல்பட்டு அஹ்மத் முகமது த்வாலாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் போலீசார் அவரை விசாரித்தபோது அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார். இதற்கிடையில் அவர் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கிலும் தனது முன்னாள் மனைவியின் மீது வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கிலும் தேடப்படும் குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை பழிவாங்கவே தனது 13 வயது மகளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே மரணமடைந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்ற தாயார், உற்றார் மற்றும் உறவினர்கள் என யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் ஆதரவற்றவர்களுக்கான கல்லறையில் மாநில நிர்வாகம் அந்த சிறுமியின் இறுதி சடங்குகளை முன்னெடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Contact Us