இமயமலையில் டிரெக்கிங் சென்ற ஜோதிகா – வைரலாகும் வீடியோ

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள டிரெக்கிங் வீடியோவிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின்னர் ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன.

 

தற்போது இவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா, தற்போது முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா, அந்த வீடியோவை தான் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.

vodeo https://www.instagram.com/tv/CThjQDFl5Zb/?utm_source=ig_embed&utm_campaign=loading

Contact Us