சிக்கிய கவுன்சில் மச்சான்: 5 மில்லியன் பவுண்டுகளை திரும்ப மக்களுக்கு கொடுக்க உத்தரவு !

முழு பிரித்தானியாவிலும் மிகவும் பிசியாக, அதிவேகமாக செல்லும் கார்களை படம் எடுத்து பெரும் பணத்தை சம்பாதித்து வந்தது, மே- பிரே கிங் என்னும் இடத்தில் உள்ள வேகக் கட்டுப்பாடு கமரா. 25 மைல் வேகத்தில் ஓடும் கார்களை கூட 35 மைல் வேகத்தில் ஓடியதாக படம் எடுக்க ஆரம்பித்தது இந்த கமரா. சவுத் ஹாம்டனில் இவ்வாறு 2015 தொடக்கம் 2017ம் ஆண்டுவரையில் சுமார் 51,000 ஆயிரம் கார்களை இது படம் எடுத்து பணம் சம்பாதித்துள்ளது. குறித்த இடத்தில் தண்டப்பணமாக £100 பவுண்டுகள் அறவிடப்படுகிறது. ஆனால் கடந்த வருடம், ஒரு கார் ஓட்டுனர், தனது வாகனம் 25 மைல் வேகத்திற்கு மேல் ஓடாது என்றும். ஆனால். தான் 35 மைல் வேகத்தில் ஓடியதாக கமரா அடித்து வந்துள்ள விடையத்தையும் நீதிமன்றில் காட்டி வழக்கை வென்ற நிலையில்… பொலிசார் இது குறித்து விசாரணையை ஆரம்பித்தார்கள். இதனூடாக 51 ஆயிரம் பேருக்கு தவறுதலாக கமரா அடித்த விடையம் தற்போது அம்பலமாகியுள்ளது…

இதனை அடுத்து சவுத் ஹாம்டன் கவுன்சில் சுமார் 5 மில்லியன் பவுண்டுகளை மீள மக்களுக்கு செலுத்த வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உண்மையில் உங்களுக்கு கூட கமரா அடித்தால், மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுவது நல்லது. ஏன் எனில் கவுன்சில் காரர்களின் மிகப் பெரிய வருமானம் இது தான். இவர்கள் மிகவும் பேராசைப் பட்டு பல இடங்களில் வேகக் கட்டுப்பாடு கமராக்களை பொருத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். Source :  Britain’s busiest speed camera is FAULTY: Authorities may now have to repay £5million in fines after driver proved it recorded him doing double his actual 25mph :

Contact Us