எலும்புத் துண்டு விண் கல்: செவ்வாய் மற்றும் ஜுப்பிட்டர் கிரகம் நடுவே சுற்றிவரும் இந்த கல்லில் என்ன உள்ளது ?

செய்வாக் கிரகம் மற்றும் ஜூப்பிட்டர் கிரகங்களுக்கு இடையே, தானும் சேர்ந்து சூரியனை சுற்றி வரும் ஒரு விண் கல் தான் கிளியோ பற்றா. இதன் நீளம் சுமார் 270 கிலோ மீட்டர் ஆகும். அகலம் 70 கிலோ மீட்டர் ஆகும். இதன் வடிவமைப்பு, சரியாக நாய் அல்லது மனித எலும்பை ஒத்ததாக உள்ளது. இந்த விண் கல் எப்படி தோன்றியது ? இது ஏன் ஜுப்பிட்டர் கிரகத்திற்கு அருகாமையில் சஞ்சரித்துள்ளது என்பது எல்லாமே பெரும் கேள்விக் குறியான விடையம். இதனை படம் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஏன் எனில் இது இரண்டு பெரிய கிரகங்களுக்கு மத்தியில் உள்ளது. இருப்பினும்…

விஞ்ஞானிகள் தற்போது இந்த விண் கல்லை துல்லியமாக புகைப்படம் பிடித்துள்ளார்கள். இந்த வின் கல்லால் பூமிக்கு பெரிய அளவில் ஆபத்து எதுவும் இல்லை. இருப்பினும் இதன் தோற்றம் பற்றி அறிய விஞ்ஞானிகள் அதிக நாட்டம் காட்டி வருகிறார்கள்.

Contact Us