லண்டனில் நேற்று மட்டும் 38,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று- 167 பேர் இறந்துள்ளார்கள்

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் சுமார் 38,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. மேலும் 167 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார சேவை அறிவித்துள்ளது. உருமாறிய “மூ” கொரோனா ஒரு பக்கம் பரவ ஆரம்பித்துள்ள நிலையில். 2 தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்ட நபர்களுக்கு கூட, தற்போது பிரித்தானியாவில் கொரோனா தொற்ற ஆரம்பித்துள்ள விடையம் பல மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உண்மையில் தாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் வேலை செய்கிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  Source: COVID-19: UK records 38,013 new infections and 167 more coronavirus-related deaths, latest daily figures show:

Contact Us