குடும்பத்தினரோடு ஆசையாக பூங்கா சென்ற சிறுமி.. 110 அடி உயரத்திலிருந்து விழுந்து பலியான பரிதாபம்..!!

 

அமெரிக்காவிலுள்ள Glenwood Caverns Adventure என்ற பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுமியான Wongel Estifanos, தன் குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அங்கு பிரபலமடைந்த Haunted Mine Drop ride-க்கு சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த பாதுகாப்பு பெல்ட் சரியாக இல்லாததால், சுமார் 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

அதன்பின்பு, உயிருக்கு போராடிய சிறுமி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அவரின் குடும்பத்தினரை, மொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. தற்போது சிறுமியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சிறுமியின் குடும்பத்தினருக்காக, GoFundMe என்ற இணையதள பக்கத்தில் நிதி திரட்டப்படுகிறது. அதாவது, சிறுமி சவாரி மேற்கொண்டபோது அவர்கள் கொடுத்த பெல்ட் சரியாக இல்லாதது தான் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பூங்கா நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Contact Us