சும்மா கொழும்பு ஏர் போட்டில் நிறால் கூட கொரோனா தொற்றுகிறது- லண்டன் வந்த நபரின் நிலமை !

கடந்த 12 நாட்களுக்கு முன்னர், கொழும்பில் அகப்பட்டு இருந்த தனது மனைவியை லண்டனுக்கு அழைத்து வர என தமிழர் ஒருவர் கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் கொழும்பு விமான நிலையத்தை விட்டு வெளியே போகவில்லை. அங்கேயே தங்கி, அடுத்த பிரித்தானிய விமானத்தை பிடித்து மனைவியோடு லண்டன் வந்து இறங்கியுள்ளார். இன் நிலையில் அவரை ஹோட்டலில் தங்க வைத்தார்கள். முதலில் செய்த PCR பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா இல்லை என்று வெளியாகி இருந்தது. ஆனால் 12 நாட்கள் கழித்து செய்யப்பட்ட PCR பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதேவேளை கணவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால்…

அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரும்பிராயை பிறப்பிடமாகவும்,  லண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பதிகளுக்கே இன் நிலை ஏற்பட்டுள்ளது. மனைவி தனது தாயாரின் மரணச் சடங்கிற்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.  இலங்கையில் கொரோனாவின் தாக்கம் எங்கு பார்த்தாலும் பன் மடங்காக அதிகரித்துச் செல்கிறது. பல நாடுகள் இலங்கையை சிவப்புப் பட்டியலில் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us