ரொறன்ரோவில் 13 வயது சிறுவனிடம் அத்துமீற முயன்ற நபர்

 

ரொறன்ரோவில் 13 வயது சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், புதன்கிழமை கிறிஸ்டி மற்றும் எசெக்ஸ் தெருக்களின் பகுதியில் காணப்பட்ட குறித்த சிறுவனை அறிமுகமில்லாத ஒருவர் நெருங்கியுள்ளார்.

பின்னர் அந்த சிறுவனிடன் தமது வாகனத்தில் தம்முடன் பயணப்பட கோரிக்கை வைத்துள்ளார். மட்டுமின்றி, தம்மிடம் கட்டாயப்படுத்துவதை உணர்ந்த சிறுவன், அவரது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அங்கிருந்து வேகமாக நடந்து சென்றதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அந்த மர்ம நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Contact Us