” கல்யாணமாகியும் கண்டவன்லாம் கூப்பிடுறானே …”மைனர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 

பதினாலு வயசில் கல்யாணமான ஒரு பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடிகார கணவரிடமிருந்து பிரிந்து தனியே வந்து விட்டார் .அதன் பிறகு அந்த குடிகார கணவன் தன்னிடம் வளர்ந்த 14 வயதான மகளை அடித்து ,துன்புருத்தி ஒரு நபருக்கு 14 வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்து விட்டார் .அதன் பிறகு தனக்கு நடந்த குழந்தை திருமணத்தால் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டார் .அந்த புகுந்த வீட்டிலும் அந்த பெண்ணை அடித்து கொடுமை ப்படுத்தினார்கள் .இதனால் அந்த பெண் அந்த வீட்டிலிருந்து தப்பி வந்து தன்னுடைய தாயாரை பார்க்க ஒரு நாள் நள்ளிரவில் ரோட்டுக்கு வந்தார் .

அப்போது ஒரு டாக்சி டிரைவர் அந்த பெண்ணை கூட்டி வந்து ஒரு விபச்சார தரகரான மானசரோவரில்வசிக்கும் ராஜு பண்டிதர் என்பவரிடம் விற்று விட்டு ஓடி விட்டார். அதன் பிறகு அந்த பண்டிதர் அப்பெண்ணை பலரிடம் விபச்சாரத்துக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார் .இப்படி பலரிடம் கை மாறி துன்பம் அனுபவித்த அந்த பெண்ணை ஒரு குழந்தை நல வாரியத்தை சேர்ந்த ஒருவர் பார்த்து அந்த பெண்ணை ஒரு சைல்டு ஹோமுக்கு அனுப்பி வைத்தார் .பின்னர் போலீசார் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றி கேள்விப்பட்டு வழக்கு பதிந்து அவருக்கு கொடுமை இழைத்தவர்களை விசாரித்து சிறைக்கு அனுப்பினர் .

Contact Us