பம்பு செட்டுக்குள் இளம்பெண் அலறல்- தப்பி ஓடிய தொழிலதிபர், வழக்கறிஞர்கள்

 

பம்பு செட்டுக்குள் இருந்து இளம்பெண் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அப்பகுதியினர் ஓடி வர, இதைப் பார்த்ததும் பம்பு செட்டுக்குள் இருந்த தொழிலதிபர், வழக்கறிஞர்கள் தலைதெறிக்க தப்பி ஓடிவிட்டார்கள். பம்பு செட்டுக்குள் இளம்பெண் அலறல்- தப்பி ஓடிய தொழிலதிபர், வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு தெருவைச் சேர்ந்த பெண்ணிடம் தொழிலதிபர் குணசீலன் என்பவர் வேலை வாங்கி தருவதாக சொல்லி பழகி வந்திருக்கிறார். பின்னர் அப்பெண்ணை காதலிப்பதாகவும் சொல்லி வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணும் குணசீலன் தன்னை காதலிப்பதாக நினைத்து அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நினைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மேல்கதீர்பூரில் இருக்கும் தனது பூர்வீக சொத்துகளை பார்த்துவிட்டு வரலாம். வருங்கால மனைவி நீதானே, சொத்துக்களை எல்லாம் எப்படி , எங்கே இருக்கிறது என்று பார்த்து வைத்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த பெண்ணும் அதை நம்பி அவருடன் காரில் சென்றிருக்கிறார். காரில் போகும்போது அப்பெண்ணுக்கு குளிர்பானம் கொடுத்திருக்கிறார் குணசீலன். அதை குடித்த சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் மயங்கி இருக்கிறார். திட்டமிட்டுதான் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இருக்கிறார் குணசீலன்.

பம்பு செட்டுக்குள் இளம்பெண் அலறல்- தப்பி ஓடிய தொழிலதிபர், வழக்கறிஞர்கள் பின்னர் அவர் மயங்கியது தெரிந்ததும் தன் நண்பர்கள் வழக்கறிஞர்கள் ஜெபநேசன், குணசேகரன், அஜித் ஆகியோருக்கு போன் செய்திருக்கிறார் அவர்களும் வந்து சேரவே நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை அப்பகுதியில் இருந்த பம்பு செட்டுக்குள் தூக்கி சென்றிருக்கின்றனர். பம்பு செட்டுக்குள் வைத்து நான்கு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இதில் அந்த பெண் திடீரென்று கதறி அழுகிறார்.

அவரின் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் ஓடி வந்திருக்கிறார்கள். இதை பார்த்த வழக்கறிஞர்களும் தொழிலதிபரும் தலைதெறிக்க தப்பி ஓடி வருகிறார்கள் .பின்னர் அப்பகுதியினர் வந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் .

பம்பு செட்டுக்குள் இளம்பெண் அலறல்- தப்பி ஓடிய தொழிலதிபர், வழக்கறிஞர்கள் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுக்கவும் போலீசார் அவரிடம் வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் வாக்குமூலத்தின்படி தொழிலதிபர் குணசீலன் , வழக்கறிஞர்கள் மூன்று பேரையும் கைது செய்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காமராஜர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Contact Us