“உன் அந்தரங்க போட்டோவ சொந்தக்காரங்க பார்த்துட்டாங்க” -கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 

ஒரு இளம் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை போலியான இன்ஸ்டாக்ராம் கணக்கை உருவாக்கி வெளியிட்ட கணவர் கைது செய்யப்பட்டார் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எம்ஹெச்பி காலனி பகுதியில் வசிக்கும் ஒரு கூரியர் நிறுவனத்தின் உரிமையாளரான 24 வயதான வாலிபர் ஒருவர் ஏற்கனவே கல்யாணமானவர் ஆவார் .அந்த நபரின் நிறுவனத்தில் ஒரு 21 வயதான பெண் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை வேலைக்கு வைத்த அவர் ,அந்த அப்பெண்ணின் அழகில் மயங்கினார் .அதன் பிறகு அவரிடம் தனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆனதை மறைத்து விட்டு அவரை காதலித்து ஜூலை 27, 2021 அன்று அமிர்தசரஸில் திருமணம் செய்து கொண்டார்

பிறகு இந்த ஜோடி ஜூலை 30, 2021 அன்று டோம்பிவிலியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அந்த வாலிபர் அந்த பெண்ணை சித்திரவதை செய்யத் தொடங்கினார், இதன் காரணமாக அவர் போரிவிலியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரது போன் எண்ணைத் தடுத்து வைத்தார் .அதன் பிறகு அந்த நபர் கோபம் கொண்டு அந்த பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை போலியான இன்ஸ்டாக்ராம் கணக்கை உருவாக்கி அதில் வெளியிட்டார் ..பிறகு அந்த போட்டோவை பார்த்த பல உறவினர்கள் அந்த பெண்ணுக்கு போன் செய்து இதை கூறினர் .அதனால் அந்த பெண் அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த நபரை கடந்த புதன் கிழமை கைது செய்தனர் .

Contact Us