சரமாரியாக தாக்கப்பட்ட சிறுவன்…. இணையத்தில் வைரலான வீடியோ…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

 

இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் கிறிஸ்டோபர் க்ரூஸ் என்னும் காவல்துறை அதிகாரி மாணவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவின்கீழ் உள்ளார். இவர் சென்றாண்டு 10 வயது பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த 10 வயது சிறுவன் சட்டென தரையில் விழுந்துவிட்டதோடு மட்டுமின்றி காவல் துறை அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு அறையினுள் நுழைந்துள்ளான்.

ஆனால் காவல் துறை அதிகாரி அந்த 10 வயது பள்ளி மாணவனை விடாது சிறுவன் நுழைந்த அறையினுள் சென்று அவனது சட்டையின் காலரை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இவருக்கு நீதிமன்றம் சிறுவனை சரமாரியாக தாக்கியது தொடர்பாகன வழக்கிற்காக சுமார் 800 பவுண்டுகளை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 85 பவுண்டுகள் காவல்துறை அதிகாரியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Contact Us