பிராங்க் ஸ்டாருடன் லவ்… உயிரையே விட்ட கல்லூரி மாணவி… திருச்சியில் சோகம்!

திருச்சி அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அனுசுயா. இந்த தம்பதிக்கு ஒரே மகளான ஜனரக்க்ஷனா (22)
திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் Msc விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது தந்தை பணி நிமித்தம் காரணமாக சென்னையில் உள்ள நிலையில் இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதாக கூறிச்சென்ற ஜனரக்ஷனா வீடு திரும்பியுள்ளார்.

சென்னையில் இருந்து திரும்பிய அவர் வீட்டிற்கு வந்த பிறகும் தாயுடன் பேசப் பிடிக்காமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜனரக்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளேடால் இரண்டு கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மாதம் இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்ற ஜனரக்ஷனாவை அவரது தாயார் காப்பாற்றிய நிலையில் தற்போது இரண்டாம் முயற்சியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக்கு காரணம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த பிரபல prank Star சூர்யா தான் என ஜனரக்ஷனா பெற்றோர்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், யூ டியூப்பில் பிராங்க் பாஸ் என்ற சேனலை நடத்தி வரும் சூர்யா, தனது அம்மாவுக்கு பிடிக்காத செயல்களை ஈடுபட்டு அதற்கு அம்மாவிடம் அடி வாங்கும் காட்சிகளை வீடியோவாக தொகுத்து வெளியிட்டு வந்துள்ளார்.

அப்போது, இவரது கேமரா யுக்திகளை தெரிந்துகொள்ள பழகிய ஜனரக்ஷனாவை காதலித்து பின்னர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், இதுபோல பல பெண்களை சூர்யா ஏமாற்றியதை அறிந்துகொன்டு ஜனரக்ஷனா சூர்யாவிடம் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகாரின் அடிப்படையில் இருவரின் போன் உரையாடல்களை எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Contact Us