நாடி நரம்பு முறுக்க, ரத்தம் கொதிக்க வெளியான அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. புல்லட்டில் வலம் வரும் ரஜினி

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் அண்ணாத்த. விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நயன்தாரா, மீனா இருவரும் குசேலன் படத்திற்குப் பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப்பின் இப்படத்தின்மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்து வருகிறார். இவர் ரஜினியுடன் முதன் முறையாக நடிக்கும் படம் இதுவாகும். மேலும் இதில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

பாலா இதற்கு முன்னதாக சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். வீரம், விஸ்வாசம் என தொடர்ந்து கிராமத்து பின்னணியில் குடும்பக் கதையை இயக்கியிருந்த சிவா இப்படத்தையும் குடும்ப பாங்கான கதையை மையமாக வைத்து எடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. போஸ்டரில் ரஜினிகாந்த் வெள்ளை வேஷ்டி சட்டையில் செம மாஸாக இருக்கிறார். போஸ்டரை பார்க்கும்பொழுது கோவில் மணி, அருவா, தேர் என எதோ கோவில் திருவிழாவின் பின்னணி தெரிகின்றது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரசிகர்கள் இதற்காக மரண வெய்ட்டிங்கில் உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருவது

Contact Us