“கப்பலில் போலாம் வாரிகளா.. “- ஆசை காமித்த பெண்ணிடம் காசை இழந்த தொழிலதிபர்கள்

 

ஒரு பெண் பல தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்களிடம் கப்பலில் பல கோடி வருமானம் தருவதாக கூறி பல கோடி ஏமாற்றியுள்ளார் மஹாராஷ்டிரா மாநிலம் கடக்படாவைச் சேர்ந்த கந்தெல்வால்,என்ற 38 வயதான பெண் மகாராஷ்டிரா கடல் வாரியத்திலிருந்து ‘துர்காடி கணேஷ் காட்’டில் ஒரு கப்பல் கட்டடத்தை வாடகைக்கு எடுத்தார் .பின்னர் அவர் அங்கு சில படகுகளை சொந்தமாக வைத்திருந்தார் .ஆனால் அவர் அந்த பகுதியில் பல தொழிலதிபர்களிடம் தான் கப்பல் வைத்திருப்பதாக கூறி அவரின் கப்பல் தொழிலில் பலகோடிகளை முதலீடு செய்ய சொன்னார் .அந்த பெண்ணின் பேச்சிலும் அழகிலும் மயங்கிய பல தொழிலதிபர்கள் அவரிடம் பல கோடிகளை இழந்தார்கள் .

அது மட்டுமல்லமல் அந்த பெண் பல வேலையில்லாத பட்டதாரி வாலிபர்களிடம் கப்பலில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 12 லட்ச ரூபாய்க்கும் மேல் ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார் .ஆனால் அவர் ஒருவருக்கு கூட வேலை வாங்கி கொடுக்கவில்லை .அதன் பிறகு அவரிடம் ஏமாந்த பல மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த கன்டெல்வாலை 1.25 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர் .அவர் மீது ஏற்கனவே ஐந்து மோசடி வழக்குகள் இது போல உள்ளது .அவரிடம் ஏமாந்தவர்கள் அவரிடம் பணம் கேட்டால் அவர் தனக்கு பல எம் எல் ஏக்கள் ஆதரவு இருப்பதாக மிரட்டுவார் .இப்போது கல்யாண் நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டெல்வாலை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்தது.

Contact Us