வேலை செய்தும் சம்பளம் இல்லை என்றால் எப்படி?’ மனைவி கேட்ட கேள்வியால்..தூக்கிட்டு தற்கொலை செய்த கணவர்

 

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (26). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் லோகேஷ் ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். தினசரி வேலைக்கு சென்ற நிலையிலும் இவருக்குக் கடந்த சில மாதங்களாகவே அந்நிறுவனத்தில் சம்பளம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் கணவர் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

வேலைக்குச் சென்றும், சம்பளம் இல்லை என்றால் எப்படி குடும்பம் நடத்துவது எனக் கேட்டு லோகேஷின் மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த லோகேஷ், நேற்று காலையில் தூங்கச் செல்வதாகக் கூறி படுக்கை அறைக்குச் சென்று, கதவைச் சாத்திக் கொண்டுள்ளார்.வெகு நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. சென்னை: அய்யோ இங்கே வந்து பாருங்களேன்.. கதறிய மணமகள்.. முதலிரவு அறையில் மணமகன் விபரீத முடிவு இதனால் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்துப் பார்த்தபோது, லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து திருவொற்றியூர் போலீசார், லோகேஷ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,

 

Contact Us