கடையில் லாட்டரி சீட்டை உரஞ்சிய தமிழருக்கு 1 மில்லியன்: ஆனால் சிறையில் இறந்து போன சோகம் !

அதிஷம் என்பது சிலரது வாசல் கதவைத் தான்… தட்டும் என்பார்கள். ஆனால் அப்படியே தட்டினாலும் கிடைத்த அதிஷ்டத்தோடு வாழத் தெரியாமல் நாசமாகப் போன பலர் உள்ளார்கள். உதாரணமாக பிரித்தானியாவில் இப்படி பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. லண்டனில் வசித்து வந்த ஈழத் தமிழர் ஒருவர், தான் வேலை பார்த்த கடையில் அடிக்கடி லாட்டரி சீட்டை வாங்கி உரஞ்சிப் பார்பது உண்டு. ஒரு நாள் அவருக்கு 1 மில்லியன் பவுண்டு வீழ்ந்தது. தனியாக ஒரு கடையை எடுத்துக் கொண்டு, 2 வீடுகளையும் வாங்கிக் கொண்டு சென்றார் அந்த தமிழர். தனக்கு தானே குழி வெட்டுவது என்று நாம் கேள்விப் பட்டு இருப்போம். ஆனால் நேரில் கண்டது இல்லை. அந்த வகையில்…

தனது உறவுக் கார பெண் ஒருவரை, வேறு ஒரு நபர் பகிடிவதை செய்தார் என்றதும். அன் நபரின் வீட்டுக்குச் சென்று தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கி, …. அவரை கடுமையாக காயப்படுதி உள்ளார் இந்த லாட்டரி விழுந்த புது மில்லியனர். தாக்கப்பட்ட நபரின் எலும்புகள் பல உடைந்த நிலையில் அவர் தனது GP இடம் சென்றுள்ளார். இதேவேளை நண்பர்களோடு , சேர்ந்து குறித்த நபரை அடித்த காட்சியை,  அவரது .. நண்பர்கள் வீடியோவாக எடுத்து, வாட்ஸ் அப், மற்றும் சமூக வலையத் தளங்களில் ஷியார் செய்தும் உள்ளார்கள்.

காயப்பட்டு சென்ற அன் நபர் GP இடம் எதனையும் தெரிவிக்க வில்லை. ஏன் வம்பு என்று மெளனமாக இருந்து விட்டாராம்.. ஆனால் GP பொலிசாரை தொடர்பு கொண்டு தன்னிடம் சிகிச்சை பெற வந்த, அந்த தமிழர் தாக்கப்பட்டு உள்ளார்.  என்று கூற. ஹமல்- பொலிசார் பெரும் விசாரணையில் இறங்கி. வாட்ஸ்-அப் வீடியோவையும் கைப்பற்றி விட்டார்கள். ஒட்டு மொத்தத்தில், இவர்களே வீடியோ எடுத்து அதனை ஆதாரமாக பொலிசாரிடம் கொடுத்த கதை ஆகிவிட்டது. இதில் சிக்கிய புது தமிழ் மில்லியனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது. அவர் சிறை சென்று திரும்பி வந்தவேளை, நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி தற்போது இறந்து விட்டார்.

ஆக மொத்தத்தில் அவர் வெற்றி பெற்ற இந்த மில்லியன் பவுண்டுகளை அவர் , சரி வர அனுபவிக்கவே இல்லை. ஆனால் இறந்து விட்டார். இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.  மேலும் அவரது மனைவி, வேறு ஒரு நபருடன் தொடர்பில் உள்ளார்.

நன்றி
சிவபிரான்: ஹமல் ஹாம்ஸ்டன் சைவ ஒன்றிய தலைவர் குறிப்பில் இருந்து.

Contact Us