ஆப்கானின் கொமாண்டோ வீரர் இங்கிலாந்து ஹோட்டலில் ஆயுதத்துடன் கைது

 

ஆப்கானிஸ்தான் சிறப்புப் படை கொமாண்டோவை மான்செஸ்டரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆயுதப்படை பொலிசார் கைது செய்துள்ளனர், கைது செய்த நபர் காபூலில் இருந்து வெளியேறும் விமானத்தில் வந்த பின்னர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

விடியலுக்கு முந்தைய சோதனை ஓகஸ்ட் 31 அல்லது செப்ரெம்பர் 1 அல்லது அதற்குள் நடந்ததாகக் கருதப்படுகிறது.

கைதானவர் இன்னும் காவலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் ஏன் கைது செய்யப்பட்டார் அல்லது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு தீவிர குற்றச் செயல் தொடர்பில் சந்தேகம் இருந்தால் சந்தேக நபரை 96 மணிநேரம் வரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் காவல்துறையினர் வைத்திருக்க முடியும். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் குற்றச்சாட்டு இல்லாமல் ஒரு சந்தேக நபரை அவர்கள் 14 நாட்கள் வரை தடுத்து வைத்திருக்கலாம்.

உள்துறை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. “தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை”என அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Contact Us