அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 6 பேர் படுகாயம்

அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், அங்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

Contact Us