கணவர் அடித்ததால் கொழுந்தனார் மகனுடன்..அவரும் அடித்ததால் வேறொரு வாலிபருடன்…அவரும்..

 

கணவர் அடித்ததால் கொழுந்தனார் மகனுடன் சென்று வாழ்ந்து வந்த இளம்பெண் கொழுந்தனாரும் அடித்ததால் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வாழத் தொடங்கியிருக்கிறார். அவரும் அடிக்கத் தொடங்கியதும், கொழுந்தனார் மகனை கழுத்தை நெரித்துக் கொன்று இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில்தான் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம்.

சாஸ்திரி நகரில் வசித்து வந்த மகேஸ்வரனுக்கும் மஞ்சு என்ற 25 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மகேஸ்வரனின் உறவுக்காரர் மதன் என்ற இளைஞர், பெயிண்டர் வேலை பார்த்து வந்த இருபத்தி ஒன்பது வயது இளைஞர் மஞ்சு உடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

மஞ்சுவும் கொழுந்தனார் மகனுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததை அறிந்து, மகேஸ்வரன் கண்டித்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. கள்ள உறவை கைவிடச்சொல்லி அடித்து உதைத்திருக்கிறார் மகேஸ்வரன். இதனால் கணவனை பிரிந்து ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியில் கொழுந்தனார் மகனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். சில நாட்கள் கழித்து கொழுந்தனார் மகன் மதனும் தினமும் குடித்துவிட்டு வந்து மஞ்சுவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.

இதனால் நொந்து போயிருந்த மஞ்சுவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜன்(35) என்ற வாலிபர் ஆறுதலாக இருந்திருக்கிறார். அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததை அறிந்த மதன் மஞ்சுவை அடித்து உதைத்து இருக்கிறார்.

இதனால் எரிச்சல் அடைந்த ராஜன், அவனிடம் எதற்கு அடிவாங்கி சாக வேண்டும் என்று தன் பங்கிற்கு மஞ்சுவை அடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு மதனை கொலை செய்துவிட நினைத்திருக்கிறார். ராஜனும் அதுதான் சரியான வழி என்று சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து குடிபோதையில் வீட்டிற்கு வந்த மதனின் கழுத்தை பிடித்து நெரித்தியிருக்கிறார் மஞ்சு. அப்போது ஒளிந்திருந்த ராஜனும் ஓடிவந்து மதனின் கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் ராஜன் தப்பி ஓடியிருக்கிறார் .

உறவினர்களை எல்லாம் அழைத்த மஞ்சு, மதன் அதிக குடிபோதையில் வீட்டிற்கு வந்து மயங்கி விழுந்து விட்டார். பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று சொல்லவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மதனின் கழுத்தில் காயம் இருப்பதால் மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர் உறவினர்களிடம்.

இதையடுத்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்து விட்டனர். புகாரின்பேரில் மஞ்சுவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மதனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்திருக்கின்றனர்.

Contact Us