“பணத்தை கட்டினா ,பொண்ணை காட்டுவோம்” -கெஸ்ட் ஹவுசில் ரகசியமாக நடந்த பலான தொழில்

 

ஒரு கெஸ்ட் ஹௌஸில் நடைபெற்ற போலீஸ் ரெய்டில் பல பெண்களை வைத்து விபச்சாரம் செய்த ஒரு கெஸ்ட் ஹௌஸ் மேனேஜரை போலீஸ் கைது செய்து அவரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தது

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள தானே மாவட்டத்தில் சஹத் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள விருந்தினர் மாளிகையில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .அதன் பேரில் தானே காவல்துறையின் மனித கடத்தல் தடுப்பு பிரிவு (AHTC) அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைகளை நடத்தியது .இரண்டு போலீஸ் குழுக்களில் ஒன்று தானே நகரத்திலும் மற்றொன்று சஹாதிலும் சோதனை நடத்தினர் .அப்போது பாலியல் தொழில் செய்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த ரெய்டில் கைது செய்யப்பட்டவர்களில் விருந்தினர் மாளிகை மேலாளரும் ஒருவர். அவர் அந்த கெஸ்ட் ஹௌஸ் வாசலில் அமர்ந்து கொண்டு ,அங்கு வரும் வாலிபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ,பின்னர் பெண்களிடம் அவரே கூட்டி செல்வார் .அவரிடமிருந்து ரூ .17,420 ரூபாயை ரெய்டின் போது போலீசார் பறிமுதல் செய்தனர்
பிறகு போலீசின் மற்றொரு குழுவினர் அங்குள்ள ஒரு லாட்ஜ் அருகே பொறி வைத்து 34 வயதுடைய ஒருவரை கைது செய்தனர், அவரிடம் இருந்து ரூ .1 லட்சத்துக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது.

Contact Us