தலிபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை; அறிவித்த முக்கிய நாடு

 

ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் அவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சி பொறுப்பேற்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் விவரங்களை வெளியிட்டனர்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் திகதியான இன்று , தலிபான்களின் புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இதன்போது சிலர் கொல்லப்பட்டதாகவும், வீடுகள் தோறும் தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

Contact Us