ஒரே நாளில் உலகின் கவனம் ஈர்த்துள்ள கனடாவில் பிறந்த இளம்பெண்

 

பிரித்தானிய இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் என பல பிரபலங்களின் பாராட்டுக்களைப் பெற்று ஒரே நாளில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார் ஒரு இளம்பெண்.

அவரது பெயர் எம்மா ரடுக்கானு (Emma Raducanu 18)!

எம்மா, கனடாவின் ரொரன்றோவில் பிறந்தவர். எம்மாவின் தந்தை Ian ரொமேனிய வம்சாவளியையும், தாய் Reneeசீன வம்சாவளியையும் சேர்ந்தவர்கள். எம்மாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. ஐந்து வயதில் டென்னிஸ் பேட் பிடித்திருக்கிறார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வரை சமூக ஊடகங்களில் எம்மாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

அதற்கு காரணம், எம்மா ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளதுதான்.

ஆம், வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 18 வயது பெண் அமெரிக்க ஓப்பன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார் என்றால், அது எம்மாதான்!

ஆகவேதான், இன்று பிரித்தானியா மட்டுமல்ல உலக டென்னிஸ் ரசிகர்கள் அனைவருமே எம்மா, எம்மா என்று கத்திக்கொண்டிருகிறார்கள்…

Contact Us