‘பெண்கள் குழந்தை பெறுவதற்கு மட்டும்தான்’…தாலிபான்கள் சர்ச்சை பேச்சு

 

‘பெண்கள் அமைச்சா்கள் ஆக முடியாது; குழந்தைகளைப் பெறுவதுதான் அவா்களது பணி’ என்று தலிபான் செய்தித் தொடா்பாளா் சையது ஜகருல்லா ஹாஷிமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த அவா் பேட்டியில், ‘அமைச்சா் பொறுப்பை பெண்களால் வகிக்க முடியாது. அது, அவா்களால் சுமக்க முடியாத பாரத்தை அவா்களது தலையில் சுமத்துவதைப் போன்றது.

அவா்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு போராடுபவா்கள் அனைவரும், ஆப்கன் பெண்களின் பிரதிநிதிகள் கிடையாது’ என்றாா்.

Contact Us