“பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!”.. உதவியாக இருந்த துணை தலைமை ஆசிரியை கைது..!!

 

பிரிட்டனில் இருக்கும் மான்செஸ்டர் நகரில் Tyldesley என்னும் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற தொடக்கப்பள்ளியில், ஜூலி மோரிஸ் என்ற 44 வயது பெண் துணை தலைமை ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக இப்பள்ளியில் கணிதம் மற்றும் மதக்கல்வி ஆசிரியராக இருக்கிறார்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் 13 வயதுக்கும் குறைவான ஒரு சிறுமியை டேவ் மோரிஸ் என்ற 53 வயது நபர், பாலியல் வன்கொடுமை செய்ய உதவியாக இருந்ததாக ஜூலி மோரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மற்றொரு சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்ய தூண்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது, ஜூலி மோரிஸையும், டேவ் மோரிஸையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கு வரும் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி லிவர்பூல் நகரில் இருக்கும் கிரௌன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us