வாகனத்தில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய தாய்.. இரண்டு குழந்தைகள் பலி.. வெளியான புகைப்படம்..!!

 

இங்கிலாந்தில் உள்ள Derby-என்ற பகுதியில் வசிக்கும் Mary McCann (35) என்ற பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அன்று வாகனத்தில் சென்ற போது, Milton Keynes அருகில் உள்ள சாலையில், Scania HGV லாரியின் மேல் வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதில் அந்த லாரி ஓட்டுனருக்கு காயங்கள் ஏற்படவில்லை. மேலும் அதில் ஒரு குழந்தை விபத்திலிருந்து தப்பிவிட்டது. மேலும் இச்சம்பவம் குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. எனவே, Mary McCann நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், காப்பாற்றப்பட்ட அந்த குழந்தை, அவரின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வழக்கின் குற்றவாளி என்று கருதப்பட்ட, குழந்தைகளின் தாய் Mary McCann எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவர், வாகனத்தை வேகமாக ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது. எனவே, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால், அவரைத் தொடர்பு கொண்டு, இச்சம்பவம் குறித்து கேட்ட போது, அவர் எந்த பதிலும் கூறாததால், நீதிபதி அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அவர் பிற நாட்டிற்கு தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, விமானநிலையங்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Contact Us