பழைய பன்னீர்செல்வமாக மீண்டு வந்த கேப்டன்.. புது உற்சாகத்தில் தொண்டர்கள்

 

தமிழ் சினிமாவில் பல படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜயகாந்த். ஒரு காலகட்டத்தில் ரஜினி கமலுக்கு இணையான போட்டியாளர் ஆகவும் இருந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போது தேமுதிக எனும் கட்சியை தொடங்கி தனித்து நின்று வெற்றி பெற்று சட்டசபையிலும் தனது பயணத்தை தொடங்கினார்.

பின்பு அதிமுகவுடன் இணைந்து வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார். ஆனால் விஜயகாந்தின் திட்டங்களுக்கு இணங்காததால் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார்.

ஆனால் இவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் தற்போது இவரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்று வருகின்றனர். தைராய்டு போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அதன் பிறகு மீண்டும் கட்சியில் இணைவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் நிரந்தரமாக கட்சியில் இருந்து தற்போது விலகி வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். சமீபத்தில் தனது பிறந்த நாளை கூட யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என அறிவுரையுடன் கூறியிருந்தார்.

தற்போது விஜயகாந்த் துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்று சென்னைக்கு விமானத்தின் மூலம் வீடு திரும்பியுள்ளார். விஜயகாந்துடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்கள் சென்றனர்.

தற்போது விஜயகாந்த் உடல்நலம் நன்றாக இருப்பதால் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது விஜயகாந்த் வீடு திரும்பிய செய்தி வைரலாகி வருகிறது.

Contact Us