“பிரச்சாரம் மேற்கொண்ட கனடா பிரதமருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!”.. மர்ம நபர் கைது..!!

 

கனடாவில் வரும் 20ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ போன்ற பல அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் மக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும், தலைவர்கள் பிரச்சாரம் நடத்தும் இடங்களுக்கு சென்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால், பிரதமருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 31-ஆம் தேதியன்று பிரதமர் கேம்பிரிட்ஜில் பிரச்சாரம் நடத்தியபோது அவருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிரதமருருக்கு மிரட்டல் விடுத்த 32 வயதுடைய நபரை கைது செய்துள்ளோம். கனடாவில் பிரச்சாரத்தின் போது இவ்வாறு ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படுவது இதுதான் முதல் தடவை என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர் பிரதமருக்கு எந்த வகையான மிரட்டல் விடுத்தார்? என்பது தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. மேலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அதனை நாங்களும் ஆதரிக்கிறோம். ஆனால் எந்த நபருக்காவது அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கட்டாயம் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Contact Us