அடுத்தவருடன் போனில் பேசிய அக்கா -கடுப்பான தம்பி –

 

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானா பகுதியில் வசிக்கும் ஷானோ என்ற பெண் , முசாபர்நகர் மாவட்டம், கத்தோலியில் வசிக்கும் தனது கணவர் ஆரிஃப் உடன் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார் . பின்னர் அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். பிறகு அந்த ஷன்னோ மீரட்டில் உள்ள ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் முந்தைய கணவருக்கு பிறந்த அவரது இரண்டு குழந்தைகள்- சம்ரீன் மற்றும் அரிஷ்- சர்தானாவில் தாத்தாவுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த ஷானோவின் மகள் சம்ரீன் , உள்ளூர் நபரை காதலித்து வந்தார் . இதுபற்றி அவரது குடும்பத்தினர் அறிந்ததும், அவர்கள் அந்த பெண்ணிடம் அந்த நபரிடமிருக்கும் காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் சம்ரீன் அவர்களின் ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டு, அவளுடைய சகோதரனுக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில் அந்த நபரிடம் தொலைபேசியில் தொடர்ந்து பேசிவந்தார் .இதனால் கோவப்பட்ட அந்த சகோதரர் அவரை கொல்ல முடிவெடுத்தார்

அதனால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அந்த பெண் வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் தலையில் அரிஷ் சுட்டுக் கொன்றார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . பிறகு துப்பாக்கி சத்தம் கேட்டு, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து, சம்ரீன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டனர்.
பிறகு சம்ரீனின் தாய் ஷானோ தனது மகன் மீது போலீசில் புகார் செய்தார் . போலீசார் அந்த அரிஷை கைது செய்து அவரிடமிருந்த கைத்துப்பாக்கியையும் மீட்டு, வியாழக்கிழமை சிறைக்கு அனுப்பினர்.

Contact Us