கசிந்த FBI அறிக்கை: விமானியின் அறைக் கதவை கறண்டியால் திறந்த 9/11 தாக்குதல் தாரிகள்- சவுதி அரேபிட உதவியது

அமெரிக்க வரலாற்றில் கறை படிந்த சோக நாளாக இருப்பது 9/11 தாக்குதல் ஆகும். அமெரிக்க இரட்டை கோபுரத்தை 2 விமானங்கள் தாக்கியது. சிறுது நேரம் எரிந்த அந்த 2 கட்டடங்களும், திடீரென தரை மட்டம் ஆனது. அதில் 3,000 பேர் இறந்தார்கள். 2001ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதல், தற்போது 20 வருடங்கள் கழித்து அமெரிக்க FBI யின் சில அறிக்கைகள் கசிந்துள்ளது. இதில் விமானத்தை கடத்திய 2 அரேபியர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ள அதே வேளை. அவர்கள் இருவரும் சவுதி அரேபியா நாட்டின் எம்பாசியில் வேலை பார்த்த ஒரு முக்கிய அதிகாரியின் வீட்டில் தான் தங்கி இருந்துள்ளார்கள் என்று FBI தெரிவித்துள்ளது. அமெரிக்க லாஸ்-ஏஞ்சல் நகரில் அவர்கள் இருவரும் தங்கி… Source FUB: How much did Saudi Arabia know? FBI release first secret 9/11 files showing anonymous Saudi embassy staffer ‘helped two hijackers in LA and let them stay at his apartment before the attack’:

பின்னர் விமானத்தை கடத்த சென்றுள்ளார்கள். குறித்த அமெரிக்க விமானத்தின் காப் பிட் என்று சொல்லப்படும் விமானியின் அறைக் கதவை, வெறும் கரண்டி மற்றும் கத்தி கொண்டு அவர்கள் திறந்துள்ளார்கள் என்ற விடையத்தையும் அமெரிக்கா தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக அவர்கள் பல பயிற்ச்சிகளை எடுத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் சவுதி அரேபியாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க கூடும் என்று அமெரிக்கா சந்தேகம் கொண்டுள்ளது. ஆனால் இதுவரை அதனை நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறபடுகிறது.

Contact Us