வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இயக்குனர் சுராஜ், நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. இதுதவிர ஏராளமான ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் நடிகர் வடிவேலுவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Contact Us