காட்டுத்தீயில் கண்டுகொள்ளாமல் செல்பி எடுக்கும் பொது மக்கள்

 

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில், பொதுமக்கள் காட்டுத்தீ முன் நின்று செல்பி எடுத்து சென்றனர்.

கோடை வெயிலால் ஆண்டலூஷியா மலைகளில் ஏற்பட்ட காட்டுத்தீ, காற்று வேகமாக வீசுவதால் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. காட்டுத்தீயில் இருந்து வெளிபட்ட வெப்பத்தால் வானில் பைராகியுமியூலஸ் என்றழைக்கப்படும் நெருப்பு மேகம் உருவானது.

அதிலிருந்து வெளிப்படும் அனல் காற்றால் உடல்நலம் பாதிக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 69 தீயணைப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

Contact Us