இளவரசர் விவகாரம்; அமெரிக்காவையே ஆட்டிவைக்கும் பிரித்தானியா !

 

அமெரிக்காவில் வசித்து வந்த பெரும் செல்வந்தர் ஜெப்ஃரி எப்ஸ்டன். அவருக்கு சொந்தமான தனித் தீவு ஒன்றில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அடிமைகளாக தங்கி இருந்தார்கள். எப்ஸ்டன் அமெரிக்காவில் மிக மிக செல்வாக்கு மிக்க நபராக இருந்ததால் பொலிசாரால் அவரை எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் திடீரென தலையிட்ட அமெரிக்க FBI அவரை கைது செய்து பல பிரிவுகளின் கீழ், வழக்கு தொடுத்தது. அதன் பின்னணியில் பல உலகப் பிரபலங்கள் சிக்கினார்கள். இதில் மைக்கிரோ சாப்ஃட் நிறுவனம் பில் கேட்ஸ் தொடக்கம் பிரித்தானிய மகாராணியாரின் பிள்ளையான அன்ரு (Prince Andrew) முதல் பலருக்கு சம்பந்தம் இருந்தது.

அதிலும் இளவரசர் அன்ரூ (Prince Andrew)ஒரு பெண்ணை கற்பழித்ததாக அவரே வாக்கு மூலம் கொடுத்து. அமெரிக்க வேர்ஜீனியா மாநிலத்தில் வழக்கு பதியப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க பொலிசார் அன்ரூவை விசாரிக்க வேண்டும் வலியுறுத்தியபோதும் பிரித்தானிய அரசு சற்றும் இடம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பிரித்தானிய வழக்கறிஞர்கள் மிகவும் வெற்றிகரமாக தொடரப்பட்ட வழக்கில் , முக்கியமாக ஒரு பிழை உள்ளதை கண்டு பிடித்து விட்டார்களாம்.

அதனை பாவித்து இளவரசர் அன்ரூவை, இனி விசாரிக்க கூடாது என்றும் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் பிரித்தானிய வழக்கறிஞர்கள் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று குதூகலமாக உள்ளாராம் இளவரசர் அன்ரூ (Prince Andrew).

Contact Us