“அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் விடுங்கடா ” -வேலை கேட்டு போன வீராங்கனைக்கு நேர்ந்த கதி

 

உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோரில் வசிக்கும் 24 வயதான பெண்ணொருவர் கோ- கோ விளையாட்டில் முன்னாள் தேசிய அளவிலான சாம்பியன் ஆவார் .அவர் இப்போது வேலையில்லாமல் இருப்பதாலும் ,அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாலும் அவர் அந்த ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் வேலை கேட்டு சென்றார் .

பிறகு அவர் திரும்பி வரும் வழியில் சிலர் அவரை கடத்தி சென்றுள்ளனர் .பிறகு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரின் உடலை அங்குள்ள ரயில் தண்டவாளம் அருகே வீசிவிட்டு சென்றனர் .அதன் பிறகு அந்த பெண் வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவர் அவரின் இந்த சடலத்தை பார்த்து விட்டு அவரின் வீட்டில் கூறினார் .பிறகு அந்த வீட்டினர் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார் கூறினர் ,மேலும் அவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க கோரி அங்குள்ள காவல் நிலையஅதிகாரிகளிடம் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்கு பிறகு தான் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செயப்பட்டாரா என்று தெரிய வருமென்று போலீசார் கூறினர்

Contact Us