பாலஸ்தீனப் போராளிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடி; காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல்

காசாவில், ஹமாஸ் அமைப்பினருக்குச் சொந்தமான முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நிகழ்த்தும் வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேல் சிறைச்சாலையில் இருந்து தப்பி சென்ற 6 பாலஸ்தீனப் போராளிகளில் 2 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகணை வீசித் தாக்கினர். இதற்கு பதிலடி தரும் விதமாக காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. மே மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே அறிவிக்கப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Contact Us